2025 மார்ச் 31, திங்கட்கிழமை

போதையில் இருந்த இ.போ.ச சாரதி கைது

Janu   / 2025 மார்ச் 20 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் ரயில் நிலையத்தில் இருந்து நல்லத்தன்னி வரை யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற  ஹட்டன் டிப்போவைச் சேர்ந்த இ.போ.ச பேருந்து சாரதி ஒருவர், புதன்கிழமை  (19) இரவு கைது செய்யப்பட்டு, பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் 25 ஆம் திகதி அன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை செல்வதற்காக ரயில் நிலையத்திற்கு வந்த யாத்திரர்கள் குழுவொன்று குறித்த இ.போ.ச  பேருந்தில் ஏறியுள்ள நிலையில் பேருந்தின் சாரதி  அதிக மதுபோதையில் இருந்ததை அவதானித்த  யாத்திரர்கள், இது தொடர்பாக ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். 

அதற்கமைய உடனடியாக செயல்பட்ட ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள்,  சாரதியை சோதித்து, அவர் குடிபோதையில் இருப்பது  உறுதி செய்த  பின்னர்.  சந்தேகத்தின் பேரில்  கைது செய்துள்ளனர்.

 மேலும், ஹட்டன் இ.போ சபை டிப்போவில் இருந்து மற்றொரு சாரதியை அழைக்கப்பட்டு, யாத்திரர்கள் குழுவை நல்லதண்ணிக்கு அனுப்ப  ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக ஹட்டன் தலைமையக பொலிஸ் பரிசோதகர் ரஞ்சித் ஜெயசேன தெரிவித்தார்.

ரஞ்சித் ராஜபக்ஷ


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X