2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

“ போதைப்பொருள் பாவனை தடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் ”

Janu   / 2024 ஜூன் 24 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான போதைப்பொருள் பாவனை மலையகத்தில் முற்று முழுதாக தடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் அதிமேதகு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார் .

2024ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஹாலி-எல, ரொக்கதென்ன தோட்டத்திற்கு விளையாட்டு மைதானம் ஒன்றினை நிர்மாணிப்பதற்குரிய பணிகள் ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறினார் .

அவர் மேலும் கருத்துரைக்கையில் ,

“ மலையகத்தில் என்றும் இல்லாதவாறு பாரியஅபிவிருத்தி வேலை திட்டங்கள் பெருந்தோட்டம் எங்கும் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. இது எதிர்கால மலையக முன்னேற்றத்திற்கு அறிகுறி ஆகும். மேலும் மலையக மாணவர்கள் கல்வியில் நல்ல பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.மலையக இளைஞர்களும் அனைத்து துறையிலும் தடம் பதித்துள்ளனர் இருப்பினும் மலையகத் தோட்டப்புறங்களை இலக்காகக் கொண்டு சிலர் சட்டவிரோதமான போதை பொருள் விற்பனையை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் மலையகத்தில் அத்தகைய கீழ்த்தரமான செயல்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது இவைத்தொடர்பிலான முறைப்பாடுகள் பொதுமக்களிடம் கிடைக்கப்பெற்றால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நான் காவல்துறை அதிகாரிகளுக்கு பணிபுரையும் விடுத்துள்ளேன் மக்களும் இவ்விடயம் தொடர்பில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதோடு சிறார்களுக்கும் இது பற்றிய தெளிவூட்டல்களை வழங்க வேண்டும்” என குறிப்பிட்டார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X