Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Janu / 2024 மே 27 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈஸி கேஸ் முறையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும் ஹந்தயா என அழைக்கப்படும் சந்தேகநபர், அவரை சோதனையிட சென்ற பொலிஸ் பரிசோதகரின் விரலை கடித்து அருகில் உள்ள கால்வாயில் குதித்து தப்பிச்சென்றதாக ருவன்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கமைய ருவன்வெல்ல அட்டுலுகம பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றின் அருகில் வைத்து குறித்த நபரை பிடித்து சோதனை செய்ய முற்பட்ட போதே, இவ்வாறு பொலிஸ் பிடியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார் .
குறித்த சந்தேக நபர் , பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகள் பட்டியலில் உள்ள ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
மேலும் காயமடைந்த பொலிஸ் பரிசோதகர் கரவனெல்ல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாகவும் சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் ருவன்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
16 minute ago
3 hours ago