2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பேருந்து விபத்தில் 20 பேர் காயம்

Janu   / 2024 ஜூலை 01 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - கண்டி வீதியில் , வெவெல்தெனிய தேவாலயத்திற்கு அருகிலுள்ள வளைவில், . போபைக்கு சொந்தமான பேருந்து மற்றும் தனியார் பேருந்தொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வட்டுபிட்டிவல மற்றும் வரக்காபொல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தங்கொவிட்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாணந்துறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த உடஹமுல்ல டிப்போவிற்கு சொந்தமான பேருந்து ஒன்றும், கலென்பிந்துனுவெவயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பெருந்தொன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது .

இரண்டு பேரூந்துகளின் சாரதிகளும் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளதுடன், விபத்தின் பின்னர் சாரதி ஒருவர் தப்பி ஓடியதாக கிடைக்கப்பெற்ற தகவல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து காரணமாக கொழும்பு - கண்டி பிரதான வீதியில் சுமார் ஒரு மணித்தியாலம் வரை போக்குவரத்து தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X