2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

பெற்றோர் மறுத்ததால் தோழியுடன் குதித்த மாணவி

Janu   / 2024 நவம்பர் 25 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குதித்து பாடசாலை மாணவியொருவர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ள  சம்பவம் சனிக்கிழமை ( 23)  பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

கண்டி தெல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி தனது தோழியுடன் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளதுடன் தோழி காப்பாற்றப்பட்டு கரைக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில் மற்றைய மாணவி நீரில் காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து, காணாமல்போன பாடசாலை மாணவியின் சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காப்பாற்றப்பட்ட தோழி சிகிச்சைக்காக தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

மாணவியின் காதல் உறவுக்குப் பெற்றோர் மறுப்பு தெரிவித்ததனால் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்ததாலேயே மாணவி உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .