2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை

பெறுமதியான வேன டொல்பின் கொள்ளை

Mayu   / 2024 நவம்பர் 18 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா பிரதேச சபைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  சுமார் 8 கோடியே 2 இலட்சத்து 50ஆயிரம் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ரூபா பெறுமதியான வேனின்  கண்ணாடியை உடைத்து கொள்ளையிட்டு சென்றுள்ள சம்பவம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (17) அன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில்  வேன் உரிமையாளர் மஸ்கெலியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன்பேரில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார பணிபுரையில், மஸ்கெலியா பொலிஸார் மற்றும் ஹட்டன் குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி, குறித்த வேன் கடத்தலுக்குச் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் ஒருவரை இரத்தினபுரி காவத்தை பொலிஸ் பிரிவில் உள்ள ஒபேவத்தை பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 28 வயது உடைய காவத்தை- ஒபேசேகர பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கு அமையக் குறித்த வேன் வவுனியா பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹட்டன் வலய குற்றத் தடுப்பு பிரிவு மற்றும் மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X