2025 மார்ச் 31, திங்கட்கிழமை

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பம் கோரல்

Editorial   / 2025 மார்ச் 23 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்களை வழங்குவதற்காக இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்திடமிருந்து (CEWET)    விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. க.பொ.த உயர்தரம், பட்டப்படிப்புக் கற்கை நெறிகள் மற்றும் இலங்கையின் ஏதேனும் அரசாங்க தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழில்/தொழில்நுட்பக்கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு இப்புலமைப்பரிசில்கள் வழங்கப்படும்.

க.பொ.த சாதாரண தரத்தில் (குறைந்தது 6 திறமைச் சித்திகளுடன்) சித்தியடைந்த  அல்லது உயர் தரத்தில் சித்தியடைந்த 25 வயதிற்கு குறைந்த மாணவர்கள் இந்தப் புலமைப் பரிசில்களுக்கு விண்ணப்பிப்பதற்குத் தகுதியானவர்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பிறப்புச் சான்றிதழ், க.பொ.த சாதாரண தரம் அல்லது உயர் தரப்பரீட்சைப் பெறுபேற்றுத்தாள்கள், பெற்றோர்களது சமீபத்திய சம்பளத்தாள் விபரம், பெற்றோரது வேலை தொடர்பாக தோட்ட அத்தியட்சகரினது அத்தாட்சி மற்றும் விண்ணப்பிக்கும் மாணவர்களின் வங்கி கணக்கு புத்தகம் (Updated) என்பவற்றின் போட்டோ பிரதிகளுடன் இணைந்ததாக அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவங்கள் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் http://www.hcicolombo.gov.in எனும் இணையத்தள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளமுடியும்.

இந்திய உயர் ஸ்தானிகராலயம், ( 36-38 காலி வீதி, கொழும்பு 03) மற்றும் இந்திய துணை உயர் ஸ்தானிகராலயம், (இல. 42,  ஹில்பஹந்துர மாவத்தை, அம்பிட்டிய வீதி, கண்டி) ஆகிய முகவரிகளிலும் விண்ணப்பப் படிவங்களை நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் செயலாளர், இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியம் (CEWET)  மே/பா, இந்திய உயர் ஸ்தானிகராலயம்,  த.பெ.இலக்கம்-882,  கொழும்பு-03 என்ற முகவரிக்கு 2025 ஏப்ரல் 28ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ கிடைக்கும் வகையில் அனுப்பப்படுதல் வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X