2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

புப்புரஸ்ஸ சிவானந்தனை காணவில்லை

Editorial   / 2025 மார்ச் 13 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெய்யன் ‪

புப்புரஸ்ஸ போமன் தோட்டத்தைச்சேர்ந்த முத்தைய்யா சிவானந்தனை (வயது 57 ) கடந்த 6 ஆம் திகதி முதல் காணவில்லை என புப்புரஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் நோய் வாய்ப்பட்டிருந்ததாகவும் மன நிலை பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தம்மால் குடும்பத்தாருக்கு சுமை ஏற்படுவதை தாம் விரும்பவில்லை என்று அடிக்கடி கூறி வந்ததாகவும் குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.

சிறந்த சமூக செயற்பாட்டாளரான இவர் கடந்த ஆறாம் திகதி அதி காலை மூன்று மணியளவில் எழுந்து தமது நோய் வாய்ப்பட்ட தாய் நலனை விசாரித்து விட்டு தாயாருக்கு தேநீர் தயாரித்து வழங்கி விட்டு தாய் தூங்கியவுடன் வீட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் என வீட்டார் சந்தேகிக்கின்றனர்.

காலை நான்கரை மணியளவில் வீட்டின் கதவு திறந்த நிலையிலிருக்க இவரைக் காணவில்லையென வீட்டார் தெரிவிக்கின்றனர்.

கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அண்மையில் வீட்டிற்கு வந்திருந்ததாகவும் அறியவருகிறது.

தொடர்ந்து இரு நாட்களாக இவரை வீட்டார் தேடிவிட்டு புப்புரஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

தோட்டத் தொழிலாளியான இவர் வேலையிலிருந்து நீங்கி இடைக்கிடை கூலி வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

புப்புரஸ்ஸ பொலிஸார் இவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X