2025 மார்ச் 31, திங்கட்கிழமை

பிரவுன்லோ தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Janu   / 2025 மார்ச் 25 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நோர்வூட் பிரதேச செயலகத்தால் நிர்வகிக்கப்படும் மஸ்கெலியா, பிரவுன்லோ கிராம அலுவலர் பிரிவுக்கு (320 N) புதிய கிராம அலுவலரை நியமிக்க கோரி, பிரவுன்லோ தேயிலைத் தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் , செவ்வாய்க்கிழமை (25) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

தற்போது, ​​பிரவுன்லோ கிராம அலுவலர் பிரிவின் பதில் கிராம அலுவலராக பணிப்புரிவது மஸ்கெலியா பிரிவின் கிராம அலுவலர் என தெரிவிக்கப்படுகிறது.

மஸ்கெலியா கிராம அலுவலர் பிரிவில் சுமார் 5000 மக்கள் தொகையும், பிரவுன்லோ பிரிவில் சுமார் 7000 மக்கள் தொகையும் உள்ளதாகவும், இந்த இரண்டு பிரிவுகளிலும் உள்ள சுமார் 3400 குடும்பங்களுக்கு ஒரு கிராம அலுவலர் பணியமர்த்தப்படுவது நியாயமானதல்ல என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

வாரத்தில் ஒரு நாள் மட்டுமே பதில் கிராம அலுவலர் , அலுவலகத்தில் பணிபுரிவதாக சுட்டிக்காட்டும் ஆர்பாட்டகாரர்கள் , சுமார் 3 வருடங்களாக நீடிக்கும் இந்தப் பிரச்சினை குறித்து நோர்வூட் பிரதேச செயலக அதிகாரிகளுக்கு வாய்மொழியாக மற்றும் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளதாகவும், இதுவரை பிரவுன்லோ பிரிவுக்கு நிரந்தர கிராம அலுவலர் ஒருவரை வழங்காததால், தோட்டத் தொழிலாளர்கள் உட்பட ஏராளமானோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.   

இந்த ஆர்ப்பாட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் உட்பட கிட்டத்தட்ட 100 பேர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

காமினி பண்டார  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X