Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2023 செப்டெம்பர் 25 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
அதிபர் உட்பட 4 ஆசிரியர்களையும் பாலியல் சேஷ்டை செய்த ஆசிரியரையும் இட மாற்றம் செய்யுமாறு கோரி பாடசாலை வளாகத்தில் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தை திங்கட்கிழமை (25) முன்னெடுத்தனர்.
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் இலக்கம் 2 தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் உட்பட ஆசிரியர்கள் 4 பேரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் 200ற்கும் மேட்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர்
“பாடசாலையின் ஒழுக்கத்தை சீரழித்த அதிபர் ஆசிரியர்களை இடமாற்றம் செய்“, “பாலியல் சேஷ்டை செய்த ஆசிரியரை வெளியேற்று“, “ஹட்டன் கல்வி பணிமனையே நடவடிக்கை எடு”, “இப்போதைய அதிபரை வெளியேற்று, தகுதியான அதிபரை நியமனம் செய்”, “தீர்மானம் எடுக்க தெரியாத முதுகெலும்பு அற்ற அதிபர் எமக்கு வேண்டாம் ” போன்ற சுலோகங்கள் எழுதிய பதாதைகளையும் ஏந்தி பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
கெர்க்கஸ்வோல்ட் இலக்கம் 2 தமிழ் வித்தியாலயத்தின் ஆசிரியர்களிடையே முறையான ஒழுக்கம் காணப்படுவதில்லை எனவும் ஒரு சில ஆசிரியர்களால் மாணவர்களுக்கு கட்பித்தல் நடவடிக்கையினை முறையாக மேற்கொள்வதில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர்.
பாடசாலையில் தரம் 4 தரம் 7 வகுப்பை சேர்ந்த மாணவர்கள் வேறு ஒரு மாணவர்களால் தாக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் உரிய அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் போது அதிபர் ஊடாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்றும் குற்றஞ்சாட்டினர்.
இதேவேளை, ஆசிரியை ஒருவருக்கும் ஆசிரியர் ஒருவருக்கும் தகாத உறவுகள் பாடசாலையில் காணப்படுகிறது . குறித்த பாடசாலையில் தரம் 4 இல் கல்வி கற்கும் மாணவர்களில் ஒரு மாணவன் 27 புள்ளிகளையும் மற்றைய மாணவர் 02 புள்ளிகளையும் பொது ஆங்கில பாடப் பரீட்சையில் பெற்றுள்ளார். 27 புள்ளிகளை பெற்ற மாணவனுக்கு 2 புள்ளிகளை பெற்றுள்ளார் எனவும் 2 புள்ளிகளை பெற்ற மாணவனுக்கு 27 புள்ளிகளை பெற்றுள்ளார் எனவும் மாணவர் முன்னேற்ற அட்டையில் பதியப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்
இதேவேளை, ஹட்டன் வலய கல்வி பணிமனையின் பணிப்பாளர் நிஹால் அபயகோன் அவர்களின் பணிப்புரைக்கமைய சம்பவ இடத்திற்கு கோட்டம் 2ற்கு பொறுப்பான கோட்டக் கல்வி பணிப்பாளர் என். சிவகுமார் அனுப்பிவைக்கப்பட்டு விசாரணைகளை மேற் கொண்டார்.
குறித்த 4 ஆசிரியர்களுக்கும் நாளைய தினத்திலிருந்து இடமாற்றம் செய்யப்படுவார்கள் எனவும் வித்தியாலயத்தின் தற்போதைய அதிபர் ராதாகிருஷ்ணனை ஹட்டன் வலய கல்வி பணிமனைக்கு விசாரணைக்கு அழைக்கப்படுவதோடு கெர்க்கஸ்வோல்ட் இலக்கம் 2 தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் ஒருவர் நியமிக்கும் வரை அப்பாடசாலையின் பிரதி அதிபர் துஸ்யந்தனை பாடசாலையை பொறுப்பேற்று நடத்துமாறு பணிப்புரை விடுத்தார்
குறித்த பாடசாலைக்கு புதிய அதிபரை நியமிக்காமல் தற்போது உள்ள அதிபர் மீண்டும் நியமிக்கப்பட்டால் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago