2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

“பார் வேண்டாம்”

Editorial   / 2023 ஒக்டோபர் 18 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

 மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹட்டன்- டிக்கோயா என்பீல்ட் ஓட்டேரி தோட்டத்தின் புதிய வீட்டுத் தொகுதியில் மதுபானக் கடை திறப்பதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதியிலுள்ள பல தோட்டத் தொழிலாளர்கள் புதன்கிழமை (18)  வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். .

 என்ஃபீல்ட், ஓட்டேரி, இன்ஜெஸ்ட்ரி மற்றும் பல தோட்டங்களைச் சுற்றியுள்ள தோட்டத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்,

 மேலும் நாட்டில் வாழ்க்கைச் செலவுகள் மிகவும் அதிகரித்துள்ளதாகவும்,  தேயிலை தோட்ட  வேலையில் கிடைக்கும் சம்பளத்தில் குடும்ப செலவுகளை நடத்த முடியாதுள்ளது. இந்நிலையில் மதுக்கடை திறந்தால் மேலும் பல பொருளாதார பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

ஏனென்றால் அப்பகுதி தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகிவிடுவார்கள் என்றும் எச்சரித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .