2025 பெப்ரவரி 05, புதன்கிழமை

பாடசாலை காவலாளி ரயிலுக்கு பலி

Editorial   / 2025 ஜனவரி 14 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக ரயில் பாதையில், கண்டியிலிருந்து பதுளை நோக்கி பயணித்த சிறப்பு விரைவு ரயிலில் மோதியதில், திங்கட்கிழமை (13) இரவு பாடசாலைக் காவலாளி ஒருவர் உயிரிழந்ததாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை ஊவா கல்லூரியில்  காவலராகப் பணியாற்றிய பதுளை, தெய்யன்னெவெல பகுதியைச் சேர்ந்த மொஹமட் மசார்ஹிர் (வயது 39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள அமுனுவெல்பிட்டிய பகுதியில் உள்ள ரயில் நிலையத்திற்கு அருகில் அவர் பயணித்துக் கொண்டிருந்தபோது, ​​கண்டியில் இருந்து பதுளை நோக்கிச் சென்ற சிறப்பு  ரயிலில் மோதுண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X