2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

பாக்கு படாரென வெடித்ததில் பெண் காயம்

Editorial   / 2023 ஒக்டோபர் 16 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஆ.ரமேஸ்

கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பூப்பனை தோட்ட தேயிலை மலையில் பாக்கை தட்டியதில் படானெ வெடித்ததில் (52) வயது பெண் தொழிலாளி ஒருவர்  காயமடைந்தார்.

அத்தொழிலாளி, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பூப்பனை தோட்ட விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நூறு மீட்டர் தூரத்தில் காணப்படும் வீதியின் மேற்பகுதியில் உள்ள தேயிலை மலையில் இந்த வெடிப்பு சம்பவம் திங்கட்கிழமை (16) காலை இடம்பெற்றுள்ளதாக கந்தப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கோகில ஆரியதாஸ தெரிவித்தார். 

  தனக்கு ஒதுக்கப்பட்ட தேனீர் இடைவேளையின் போது தேனீர் அருந்திவிட்டு வெற்றிலை போடுவதற்கு தேயிலை மலையில் உள்ள கல் ஒன்றில் பாக்கு உடைக்க முற்பட்டுள்ளார். அக் கல்லுக்கு கீழ் இருந்ததாக கூறப்படும் "ஹக்கப்பட்டாஸ்" வெடித்து காயங்கள் ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருப்பினும் இவ்வாறு வெடித்த வெடி "ஹக்கப்பட்டாஸ் " என்று சொன்னாலும் இதில் சந்தேகம் உள்ளதாக தெரிவித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இது தொடர்பாக சோதனையும், விசாரணையையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

 பூப்பனை மேல்பிரிவு தோட்ட தேயிலை மலைகளில் அதிகமான காட்டு பன்றிகள் நடமாடுவதாகவும் இதனால் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தொழிலாளர்கள் கவலை தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .