Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2023 ஒக்டோபர் 15 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஆரம்பமாகி தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. எனினும், ஹலிஎல திகல்ல கிராமத்தில் இருந்து பரீட்சைக்கு தோற்றுவதற்காக வந்த மாணவர்களுக்கு பஸ்கள் இல்லாததால் மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.
தீகல்ல உடகமவிலிருந்து பதுளை நோக்கி இரண்டு பஸ்கள் காலை 5.55 மற்றும் 6.30 மணியளவில் பயணத்தை ஆரம்பிக்கும். எனினும், இன்று (15) ஒரு பஸ் கூட ஓடவில்லை என தீகல்ல உடகம கிராம மக்கள் தெரிவித்தனர்.
இதன்காரணமாக தீகல்ல உடகம, பனகன்னிய, அஹஸ்போகுன, ஊவா கெட்டவல வத்த, திக்வெல்ல வத்த, போன்ற பல கிராமங்களில் இருந்து இன்று (15) காலை மாணவர்கள் தமது பெற்றோருடன் ஹாலிஎல, பதுளை, கந்தேகெதர நகரங்களில் உள்ள பாடசாலை பரீட்சை நிலையங்களுக்கு செல்வதற்காக வருகை தந்துள்ளனர். கெட்டவல நகருக்கு சுமார் 10 கிலோமீற்றர் தூரம் நடக்க வேண்டியிருந்தது என்று மாணவர்கள் கூறுகின்றனர்.
கெட்டவல நகரத்தைச் சேர்ந்த புலமைப்பரிசில் மாணவர்கள் ஹாலிஎல மற்றும் பதுளை கந்தேகெதர நகரிலுள்ள பரீட்சை நிலையங்களுக்குச் சென்றபோது புலமைப்பரிசில் பரீட்சை ஆரம்பமாவதற்கு சற்று நேரமே இருந்தது என்றும் பரீட்சார்திகளும் பெற்றோரும் கூறுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago