Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Editorial / 2024 ஓகஸ்ட் 17 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஷ்.
பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீன் பழைய தோட்டம் என அழைக்கப்படும் சீன் லோவர் பூண்டுலோயா தோட்டத்தில், வெள்ளிக்கிழமை (16) இரவு 08 மணி அளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து சம்பவத்தில் 28 வீடுகள் கொண்ட இலக்கம் (01) தொடர் குடியிருப்பு லயத்தில் 25 வீடுகள் எரிந்து சாம்பலாகி உள்ளதாக பகுதிக்கு பொறுப்பான கிராம அபிவிருத்தி அதிகாரியின் அறிக்கை படி பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த திடீர் தீ விபத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 25 வீடுகளை சேர்ந்த 86 பேர் நிர்கதிக்குள்ளான நிலையில் அத் தோட்ட ஆலய மண்டபம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் இந்த திடீர் தீ பிடிப்பு சம்பவத்தினால் அதிர்ச்சிக்கு உள்ளான இரு வயோதிபர்கள் கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் வீடுகளை இழந்து உள்ள மூன்று கர்ப்பிணி தாய்மார்கள் உறவினர்கள் வீடுகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தீ சம்பவத்துக்கான காரணம் மற்றும் சேத விவரங்களை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தனர்.
அதேநேரம் இந்த தீ பிடித்த சம்பவம் இடம்பெற்ற சிறிது நேரத்தில் சீன் தோட்டத்திற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இளைஞர்கள் போராடி உள்ள போதிலும் பலனளிக்கவில்லை எனவும் நுவரெலியா மாநகரசபை தீயணைப்பு பிரிவுக்கு அழைப்பு விடுக்கபட்டதாகவும் அவர்கள் உரிய நேரத்தில் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்த தீ பிடிப்பு சம்பவத்தை உணர்ந்த குடியிருப்பாளர்கள் முடிந்தவரை போராடி தமது உடைமைகளை காப்பாற்றியும் உள்ளனர் பலர் தமது உடைமைகளை இழந்துள்ளனர்.
அத்துடன் இந்த சம்பவத்தை அறிந்த அமைச்சர்,இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் சம்பவ இடத்திற்கு நள்ளிரவில் வருகை தந்து பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டதுடன் உடன் தேவைகளுக்கான வசதிகளும்,நிதி உதவியும் செய்து சென்றதாக தோட்ட மக்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago