2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பல்கலைக்கழக மாணவிக்கு தொல்லை கொடுத்த இளைஞர்கள்

Freelancer   / 2024 மே 18 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து பல்கலைக்கழக மாணவிக்கு தொல்லை கொடுத்த 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் சென்ற 06 இளைஞர்கள் அதே ரயிலில் பயணித்த பல்கலைக்கழக மாணவிக்கு பல தடவைகள் தொல்லை கொடுக்கும் வகையில் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் குறித்த மாணவி தனது பெற்றோருக்கு அறிவித்து பின்னர் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த 06 இளைஞர்களை பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று ஹட்டன் புகையிரத நிலையத்தில் வைத்து கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் சிவனொளிபாத மலைக்கு யாத்திரிகை வந்துள்ளதாகவும் கொழும்பில் வசிக்கும் 20 முதல் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்களிடம் இருந்து ஆரம்பகட்ட வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், அவர்கள் இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .