Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Freelancer / 2024 ஜூலை 11 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.திவாகரன், ஆ.ரமேஸ்.
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா -கண்டி பிரதான வீதியின் "டொப்பாஸ்" பகுதியில் அதி சொகுசு பேருந்து வியாழக்கிழமை (11) அதிகாலை 4.30 மணியளவில் விபத்துக்கு உள்ளானது.
இந்த பேரூந்து விபத்தில் சிக்கியதில், 40 பயணிகள் காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களில் 07 பேர் அவசர சிகிச்சை பிரிவிலும் ஏனைய 33 பேர் சாதாரண சிகிச்சை பிரிவிலும் அனுமதித்துள்ளதாக நுவரலியா மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.
நுவரெலியா தனியார் விடுதி ஒன்றிலிருந்து 42 பயணிகள் திருகோணமலைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு அதி சொகுசு பேரூந்தில் பயணித்துள்ளனர்.
குறித்த பேரூந்து நுவரேலியா -கண்டி பிரதான வீதியில் டொப்பாஸ் பகுதியில் சென்ற போது திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக நடு வீதியில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
அதேநேரத்தில் பேரூந்தை செலுத்திய சாரதி சாமர்த்தியமாக பேரூந்தை வீதி பாதுகாப்பு தடையில் மோதி பாரிய விபத்தை தடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை நுவரேலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .