2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

நுவரெலியா மாவட்டத்தில் பெரும் பாதிப்பு

Editorial   / 2024 நவம்பர் 27 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ்.கணேசன்

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக செவ்வாய்க்கிழமை (26) பிற்பகல் வரை 193 குடும்பங்களைச் சேர்ந்த 691 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக 98 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 50 குடும்பங்களைச் சேர்ந்த 207 பேர் 3 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு  நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .