2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

நுவரெலியா மாவட்டத்தின் பாதிப்புக்கள்

Mayu   / 2023 டிசெம்பர் 28 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக  நுவரெலியா,அம்பகமுவ, கொத்மலை, ஹங்குராங்கெத்த, வலப்பனை ஆகிய பிரதேசங்களில் (28) இரவு முதல் இடைவிடாது பெய்து வரும் பலத்த மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் கந்தப்பளையில் அதிக மழை பெய்து வருவதுடன் தாழ் நில பகதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

இதன் காரணமாக  வீடுகள்,விவசாய நிலங்கள்,பிரதான வீதிகள் நீரில் மூழ்கி பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதுடன்,போக்குவரத்து இடையூருகளும் ஏற்பட்டுள்ளது.

வலப்பனை பிரதேசத்தில்  இராகலை புரூக்சைட் மற்றும் சில்வர்கண்டி தோட்டத்தில் வேருடன் பாரிய மரம் சாய்ந்து புரூக்சைட் சந்தி ஊடாக கோனபிட்டிய மற்றும் ஹைபொரஸ்ட் வரை செல்லும் பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில்வர்கண்டி தோட்டத்தில் ஊற்று நீர் உள்ள பகுதியில் பாரிய மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் மண்ணை அகற்றி போக்குவரத்தை மேற்கொள்ள பொலிஸாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வலப்பனை நில்தண்டாஹீன வெளிஹின்ன துங்கலஹேன பகுதியில் பாரிய கண்களுடன், மண்மேடு ஒன்று சரிந்துள்ளது.இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக நில்தண்டாஹீன பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மண்மேடு சரிந்து பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மண்ணை அகற்றும் பணிகள் முன்னெடுக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக ஹங்குராங்கெத்த பொலிஸார் தெரிவித்தனர்.

உடபுஸ்ஸலாவ சேன் மாக்றட் குடியிருப்பு ஒன்றின் பின் பகுதியில் மண்மேடு சரிவு ஏற்பட்டுள்ளதாக உடப்புஸ்ஸலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் மத்துரட்ட பொலிஸ் பகுதியின் பிரதான வீதியில் மரம் ஒன்று சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு சரிந்த மரத்தை அகற்றும் பணி பிரதேச மக்களின் உதவியுடன் மேற்கொண்டு வருவதாக மத்துரட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

ஆ.ரமேஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .