Janu / 2024 ஜூன் 03 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தனி வீடொன்றில் இரண்டு பெண்களின் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் வெள்ளிக்கிழமை (31) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது .
குறித்த வீட்டில் , 80 வயதான வயோதிபப் பெண் ஒருவரும் , 35 வயதுடைய பெண் ஒருவரும் தனிமையில் இருந்த நேரத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த இருவர் நகரசபை ஊழியர்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்து எட்டு இலட்சம் பெறுமதியுடைய இரண்டு தங்க சங்கிலிகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து இரு பெண்களும் சத்தமிட , அங்கு வந்த அயலவர்களின் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிய கொள்ளையர்கள் சென்ற வீதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் ஊடாக மோட்டார் சைக்கிளின் பதிவு இலக்கத்தின் அடிப்படையில் திம்புள்ள - பத்தன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், நுவரெலியா தடயவியல் பிரிவு பொலிஸார் மோப்ப நாயுடன் சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எனினும் கொள்ளையர்கள் இருவரும் முகத்தை மூடிக்கொண்டு வந்திருப்பதால் அவர்கள் குடியிருப்பாளர்களை நன்கு அறிந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
செ.திவாகரன்


39 minute ago
50 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
50 minute ago
57 minute ago
1 hours ago