2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

தொடர் மழையால் நீர் நிலைகளில் அதிகளவில் குப்பைகள்

Janu   / 2023 செப்டெம்பர் 27 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மலைநாட்டில் தொடர்ந்து பெய்யும் கன மழையால் மவுசாகல காசல்ரீ மேல் கொத்மலை கென்யோன் லக்ஷபான, நவக்ஷபான பொல்பிட்டிய, கலுகல, விமலசுரேந்திர, ஆகிய நீர் தேக்கங்களுக்கு அதிக அளவில் குப்பைகள் வந்து சேர்ந்து உள்ளது.

இவற்றில் அதிகளவில் பிலாஸ்டிக் பொருட்கள் மற்றும் ஏனைய குப்பைகள் ஆகும். இவ்வாறான குப்பைகளை பெருந்தோட்ட பகுதிகளிலும், நகரிலும், மற்றும் கிராமப்புறங்களில் வாழும் மக்கள் வீசுவதால் அப் பகுதியில் உள்ள ஓடைகள் மற்றும் காட்டாறுகள் ஊடாக நீர் தேக்கங்களில் வந்து குவிந்து உள்ளது.

இதனால் நீர் தேக்கங்களில் வாழும் உயிரினங்கள் அழிந்து போகும் நிலை தோன்றியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவணம் செலுத்தி நீர் தேக்க பகுதிகளில் உள்ள அனைத்து குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

செ.தி.பெருமாள்

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X