2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற ரிப்பர் விபத்து

Freelancer   / 2025 ஏப்ரல் 19 , பி.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் பொகவந்தலாவை பிரதான வீதியில் நோர்வூட் சென்ஜோண்டிலரி தோட்டப் பகுதியில் இன்று தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற ரிப்பர் ரக லொறி ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மூவரும் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொகவந்தலாவை லொய்னோன் தோட்டத்திலிருந்து ஹட்டன் வனராஜா தோட்டத்திற்கு தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற ரிப்பர் லொறியில் ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக லொறி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் நோர்வூட் பொலிஸார், விபத்து நடந்த நேரத்தில் ரிப்பர் லொறியில் ஏழு பேர் பயணித்ததாக தெரிவித்தனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .