2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

தீபாவளிக்கு திகா கேட்கிறார்

Freelancer   / 2023 ஒக்டோபர் 17 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

நவம்பர் மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 20 ஆயிரம் ரூபாவை வழங்குமாறு, பெருந்தோட்ட கம்பனிகளிடம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹட்டனில்   ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்த கொண்டு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், பலரும் போட்டியிட போவதாக அறிவித்தல் விடுகின்றனர். யார் போட்டியிட்டாலும், சஜித் பிரேமதாஸவே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டுவார்.  மக்கள் ஆதரவு இல்லாதவர்களால் எவ்வாறு வெற்றியீட்டமுடியும்.

ஏனையவர்களை போல, மலையக மக்கள் மத்தியில் சென்று பொய்யான வாக்குருதிகளை கூறி மக்களை நாம் ஏமாற்றும் நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபடமாட்டோம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .