2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

தீபாவளிக் கொடுப்பனவு இரட்டிப்பாக அதிகரிப்பு

Simrith   / 2024 ஒக்டோபர் 29 , பி.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீபாவளி பண்டிகைக்கான முற்பணக் கொடுப்பனவினை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது

தமிழ் மக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகைக்காக அரச பெருந்தோட்ட கம்பனிகளினால் வருடாந்தம் வழங்கப்படுகின்ற பண்டிகைக்கால கொடுப்பனவானது பத்தாயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரச பெருந்தோட்டக் கம்பனி, எல்கடுவ பெருந்தோட்டக் கம்பனி மற்றும் பொதுமக்கள் தோட்ட அபிவிருத்தி சபை ஆகியவற்றின் கீழ் நிர்வகிக்கப்படுகின்ற தோட்டக் கம்பனிகளில் பணிபுரிகின்ற பணியாளர்களுக்கே இவ்வாறு அதிகரிக்கப்பட்ட பண்டிகைக்கால கொடுப்பனவினை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடங்களில் பத்தாயிரம் ரூபாவாக (10,000) வழங்கப்பட்டு வந்த தீபாவளி பண்டிகைக்கால முற்கொடுப்பனவானது, இவ்வருடத்தில் இருபதாயிரம் (20,000) ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் காணப்படுகின்ற பொருளாதார நெருக்கடியினால் வாழ்க்கை செலவு மற்றும் தொழிலாளர்களின் கொள்வனவு செய்யும் சக்தி குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றமையினை கவனத்திற் கொண்டே, இந்த விசேட பண்டிகைக்கால கொடுப்பினை வழங்குவதற்கு தீர்மானித்ததாக அமைச்சின் செயலாளர் பி.கே. பிரபாத் சந்திர கீர்த்தி அவர்கள் தெரிவித்தார்.

தமிழ் மக்களினது விசேட பண்டிகையான தீபாவளி பண்டிகையினை கொண்டாடும் மலைநாட்டு தமிழ் பிரஜைகளை போன்றே முழு நாட்டிலுமுள்ள அனைத்து தமிழ் மக்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

ஊடகப் பிரிவு

(சுற்றாடல், வனசீவராசிகள், வனவளங்கள், நீர் வழங்கல், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X