2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

திரும்பிய பஸ்ஸிலேயே உயிர் பிரிந்தது

Editorial   / 2023 ஒக்டோபர் 20 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குச்சென்றுவிட்டு பஸ்ஸில் வீடு திரும்பிக்கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை   பஸ்ஸிலேயே உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

டிக்கோயா, படல்கல மேல் பிரிவைச் சேர்ந்த  ஆறுமுகன் தியாகேஸ்வரன் என்பவரே பஸ்ஸிலேயே  உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் முச்சக்கரவண்டி சாரதி என்பதுடன், தொற்று அல்லாத நோய்க்கு மருந்து எடுப்பதற்காக, மாதம் ஒருமுறை கண்டி போதனா வைத்தியசாலைக்கு சென்று வருபவர்.

அவர் வியாழக்கிழமை (19ஆம் திகதி) வீட்டை விட்டு வெளியேறி, (20ஆம் திகதி) காலை கிளினிக்கிற்குச் சென்று, தனியார் பஸ்ஸில் வீடு திரும்பியுள்ளார்.

ஹட்டனில் இருந்து போடைஸ் நோக்கிச் ​சென்ற  ​பஸ்ஸில் பயணித்த போது அவர் உயிரிழந்ததாக உயிரிழந்தவரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

பஸ்ஸில் பயணம் செய்த பயணிகளில் ஒருவர் பஸ்ஸில் இருந்து இறங்காதது குறித்து  ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு தெரிவிக்கப்பட்டது.  அவர்கள் இருவரும் பயணியை சோதனையிட்டதில் அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

ஹட்டன் பொலிஸாரின் பணிப்புரையின் பிரகாரம் உயிரிழந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையின் சடலம் அதே பஸ்ஸில் டிக்கோயா-கிளங்கன் ஆரம்ப வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு கையளிக்கப்பட்டது.

ரஞ்சித் ராஜபக்ஷ


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .