Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Janu / 2024 ஜூன் 20 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிலாஸ்கோ தோட்டப்பிரிவான நெதஸ்டல் தோட்டத்தில் வியாழக்கிழமை (20)அதிகாலை திடீர் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் 20 வீடுகள் கொண்ட தொடர் குடியிறுப்பு தொகுதியில் உள்ள வீடொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் இந்த வீட்டில் வசித்து வந்த , குழந்தை பெற்று சில நாட்களான தாய் ஒருவர் உட்பட ஐவர் நிர்கதிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த தீ பிடிப்பு சம்பவத்தை அறிந்த அயலவர்கள், தோட்ட பொதுமக்கள் ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் அதிரடியாக நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளதால் பாரிய பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தீ பிடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டு நிர்கதிக்கு ஆளாகியுள்ள ஐவரை பாதுகாப்பாக உறவினர்கள் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அக்கரபத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆ.ரமேஸ் , துவாரகஷான், செ .தி பெருமாள்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
18 minute ago