2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை

தாய் அருகில் உறங்கிய சிறுமி, பாலியல் பலாத்காரம்

Janu   / 2024 டிசெம்பர் 31 , மு.ப. 09:22 - 0     - 137

மொனராகலை , அம்பிட்டிய பிரதேசத்தில் குடும்பத்துடன்  உறங்கிக் கொண்டிருந்த 15  வயதுடைய  சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 35 வயதுடைய ஒருவர் திங்கட்கிழமை (30)  கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி, தனது தந்தை கொழும்பு பகுதியில் பணிபுரிந்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை( 29) இரவு தாய் மற்றும் சகோதரியுடன் ஒரே அறையில் கட்டில் ஓரத்தில் உறங்கிக் கொண்டிருந்துள்ளதுடன் அதிகாலையில் எழுந்த போது அவள் அருகில்  யாரோ அமர்ந்திருப்பதை உணர்ந்துள்ளார்.

இதன்போது சந்தேக நபர்  வெள்ளைத் துணியால் முகத்தை மறைத்து இருந்த நிலையில் குறித்த சிறுமி சந்தேக நபரின் கையைப் பிடித்துக் கொண்டு கூச்சலிட்டுள்ளார்.

அப்போது சந்தேக நபர், "கையை விடு" என்று கூறியதும், அவரது குரலில் இருந்து அவர் பந்துல என்ற நபர் என சிறுமி அடையாளம் கண்டதையடுத்து சந்தேக நபர் தப்பியோடி உள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய வீட்டைச் சோதனையிட்டபோது, ​​சந்தேகநபர் சமையல் அறையின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தது தெரியவந்துள்ளது.

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை ​பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X