2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

தாயின் கணவரால் சிறுமி துஷ்பிரயோகம்

Janu   / 2024 மார்ச் 06 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹியங்கனை , கெசல்பொத்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 12 வயதுடைய மாணவி ஒருவரை காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத அவரது தாயின்  இரண்டாவது கணவர் , துஷ்பிரயோகத்திற்கு  உட்படுத்திய  சம்பவம்  செவ்வாய்க்கிழமை  (05) பதிவாகியுள்ளது . 

குறித்த மாணவி  பாடசாலை  முடிந்து வீட்டுக்குச் செல்ல முடியாது என  அதிபரிடம்  தெரிவித்ததையடுத்து  இது தொடர்பில்  பாடசாலையின்  அதிபரால் மஹியங்கனை சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளுக்கு  அறிவித்துள்ளார் . 

இதற்கமைய பாடசாலைக்கு  சென்ற  அதிகாரிகளால்  , குறித்த  சிறுமி மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  ,  வைத்தியர்களால் பரிசோதனை  செய்த  போது,  மாணவி  பல தடவைகளை  குறித்த நபரால்  துஷ்பிரயோகத்திற்குள்ளாகியமை தெரியவந்துள்ளது .

இதனையடுத்து கெசல்பொத்த, மாபாக்கடையில் வசிக்கும் 48 வயதுடைய சந்தேக நபரை கைது செய்து மேலதிக  விசாரணைகளை  மேற்கொண்டு வருவதாக  மஹியங்கனை பொலிஸார் 
தெரிவித்துள்ளனர் . 

மேலும் , குறித்த  சிறுமியின் தாயும் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத பெண் என்பது  குறிப்பிடத்தக்கது .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .