Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2024 மே 23 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெசாக் தினம் இன்றும் (23) நாளையும் (24) நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதற்காக வெசாக் தோரணங்கள் ஆங்காங்கே அலங்கரிக்கப்பட்டுள்ளன.
அவ்விரு நாட்களுடன் சனி, ஞாயிறு விடுமுறை தினங்கள் வருகின்றன. இதனால், பெரும்பாலான மக்கள் பெரும் நகரங்களில் இருந்து தங்களுடைய சொந்த இடங்களுக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.
நாடளாவிய ரீதியில் பெய்கின்ற கடுமையான மழைக்காரணமாக, மாலைநேர மற்றும் இரவு பயணங்களை தவிர்த்துக்கொண்ட பயணிகள், போயா தினமான இன்று (23) வியாழக்கிழமை அதிகாலையிலேயே சொந்த இடங்களை நோக்கி பயணித்தனர்.
கொழும்பில் தங்களுடைய தங்குமிடங்களில் இருந்து அதிகாலை 4 மணியளவில், புறக்கோட்டை இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் நிலையத்துக்கு வருகைதந்தாலும் பெரும்பாலான இடங்களுக்குச் செல்வதற்கு பஸ்கள் இல்லவே இல்லை.
இந்நிலையில், தனியார் பஸ் நிலையத்துக்கு ஓடியுள்ளனர். அங்கும் சில இடங்களுக்குச் செல்வதற்கான பஸ்கள் இல்லை. எனினும், ஒருசில தனியார் பஸ்கள் தங்களுடைய வீதித்தடத்தை மாற்றி, தூர இடங்களுக்கு பயணித்துள்ளன. பயணிகளின் நலனை கருத்தில்கொண்டு இவ்வாறு மாற்று ஏற்பாடுகளை செய்திருந்தமை வரவேற்கத்தக்கது.
அவ்வாறுதான் மஹரகம அல்லது ஹோமகம வழித்தட தனியார் பஸ்ஸொன்று, கொழும்பு கோட்டை தனியார் பஸ் நிலையத்தில் இருந்து ஹட்டனை நோக்கி பயணித்துள்ளது.
அதிகாலை வேளை என்றாலும் அதிகளவில் பயணிகள் நிரம்பியிருந்தனர். எனினும், சொந்த இடங்களுக்குச் செல்வதற்காக பலரும் முண்டியடித்துக்கொண்டு ஏறிவிட்டனர். ஆசனங்களில் அமர்ந்திருந்தவர்களை விடவும் நின்றுக்கொண்டு பயணிக்க ஏறியவர்களின் எண்ணிக்கையே அதிகமாகும். இரண்டு கதவுகளுக்கு வெளியே தொங்கிக்கொண்டு பயணிக்கும் அளவுக்கு பயணிகள் நிரம்பியிருந்தனர்.
சொந்த இடங்களுக்குச் சென்றே தீரவேண்டுமென பயணிகளின் ஏக்கத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பஸ் நடத்துனர் அமர்ந்திருந்து பயணித்தவர்களிடம் இருந்து 1,000 ரூபாயும், நின்றுக்கொண்டு பயணித்தவர்களிடம் இருந்து 650 ரூபாயும் அறவிட்டுள்ளனர். இதில் என்ன நியாயம் இருக்கின்றது.
சாதாரண நாளொன்றில் கொழும்பில் இருந்து ஹட்டனுக்கு பயணிக்க ஒருவழி கட்டணமாக 471 ரூபாய் அறவிடப்படுவதாகவே பயணிகள் தெரிவிக்கின்றனர். இதேபோல, எந்ததெந்த வழித்தடங்களில் போயா தின கொள்ளைகள் இடம்பெற்றனவோ என்றும் பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago