2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

தனித்தும் இணைந்தும் செல்கிறார் இராதா

Editorial   / 2025 மார்ச் 10 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சில மன்றங்களில் தனித்தும், இன்னும் சில மன்றங்களில் இணைந்தும் போட்டியிடுவதற்கு மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளதாக முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

ஏனைய உள்ளூராட்சி மன்றங்களில், தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றுடன் இணைந்து போட்டியிட முன்னணி முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

மலையக மக்கள் முன்னணியின் மகளிர் தினக் கொண்டாட்டம் ஹட்டனில் உள்ள அதன்   அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்றது. ​அதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 பதுளை, இரத்தினபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தனது கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறிய அவர், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பல உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை மலையக மக்கள் முன்னணி கைப்பற்றும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .