2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

டெங்கு அபாயம் ; 1621 பேர் அடையாளம்

Janu   / 2024 மே 22 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய   மலையகத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கண்டி  மாவட்டத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு  தெரிவிக்கையில் 2024 ம் ஆண்டு  கடந்த 18 வாரங்களில் ( நான்கரை மாதம்) கண்டி மாவட்டத்தில் 1621 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது.

2023 ம் ஆண்டு இக் காலப் பகுதியில் கண்டி மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 1440 ஆகும். அதன்படி இவ்வருடம் 181 நோயாளர்கள் அதிகரித்துள்ளதாகவும் அப் பிரிவு தெரிவிக்கின்றது.

இன் நிலையில் தற்போது நிலவுகின்ற அதிக மழை காரணமாக ஆங்காங்கே நீர் தேங்கி இருப்பதால் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும்  சுற்றாடலை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுமாறும் சுகாதார பிரிவினர் வேண்டுகின்றனர்.  

எதிர்வரும் காலங்களில் சுகாதார அதிகாரிகள் வீட்டு சூழல்களை பரீட்சிப்பதற்காக வீடு வீடாக வர உள்ளதாகவும் நுளம்புகள் பரவும் விதத்தில் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மொஹொமட் ஆஸிக்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X