Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை
Editorial / 2024 டிசெம்பர் 18 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
திம்புள்ள- பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை டிரேட்டன் தோட்டம் கே.ஓ பிரிவில் 10 வீடுகள் கொண்ட 6ம் இலக்க தொடர் லயன் குடியிருப்பு புதன்கிழமை (18) முற்பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், ஏனைய மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளன.
இந்த நான்கு வீடுகளிலும் இருந்த 22 பேர் உறவினர்கள் வீடுகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தீ ஏற்பட்ட போது வீட்டில் இருந்தவர்கள் எரிவதை கண்டு கூச்சலிட்டதாகவும், அதன் பிறகு அயலவர்கள் ஓடி வந்து ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
குறித்த வீட்டில் இருந்த பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், உடு துணிகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகத்தின் ஊடாக வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கின்றது. இத்தீக்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார். தீ பரவியமைக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago