2025 பெப்ரவரி 05, புதன்கிழமை

டிக்கோயா-மானெலியில் குளவி கொட்டு

Editorial   / 2025 ஜனவரி 17 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 சுதத் எச். எம். ஹேவா

டிக்கோயா மற்றும் மானெலி தோட்டங்களில் நடந்த குளவிக்கொட்டில்  தோட்டத் தொழிலாளர்கள் அறுவர் காயமடைந்து டிக்கோயா-கிளங்கன்  மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விரு தோட்டங்களிலும் தொழிலாளர்கள் வியாழக்கிழமை (16) பணிப்புரிந்து கொண்டிருந்த போதே குளவிகள் கலைந்து கொட்டியுள்ளன.

இவ்விரு தோட்டங்களைச் சேர்ந்த மூன்று பெண் மற்றும் மூன்று ஆண் தோட்டத் தொழிலாளர்கள் குளவிகள் கொட்டினால் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறினார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் நிலைமை மோசமாக இல்லை, அவர்கள் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்றும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X