2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

ஜீவனின் மெய்பாதுகாவலர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து மீளப் பெற்றனர்

Editorial   / 2024 ஜூன் 02 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுஜிதா, கௌசல்யா

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டிருந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது துப்பாக்கிகளை தலவாக்கலை பொலிஸாரிடம் ஒப்படைத்துவிட்டு சில மணித்தியாலங்களின் பின்னர் மீளப்பெற்றுக்கொண்டனர் எனபொலிஸார் தெரிவித்தனர்.  

 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் அக்கட்சியின் ஆதரவாளர்களை அழைத்துக்கொண்டு நுவரெலியா பொலிஸ் நிலையத்துக்குச் சென்று நியாயம் கேட்டார்..

 

அமைச்சரின் பாதுகாப்பு பிரிவினரின் துப்பாக்கிகளை கைப்பற்றுமாறு தலவாக்கலை பொலிஸாருக்கு பொலிஸாருக்கு தொலைபேசி செய்தியும் கிடைத்துள்ளது.

அத்துடன், பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட துப்பாக்கிகளை அதே அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு தலவாக்கலை பொலிஸாருக்கு சில மணித்தியாலங்களின் பின்னர்  கிடைத்த தொலைபேசி செய்தியின் அடிப்படையில் அமைச்சரின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளிடம் துப்பாக்கிகள் கையளிக்கப்பட்டன.

அமைச்சரின் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் நேற்று (01) இரவு 11 மணியளவில் தலவாக்கலை பொலிஸ் நிலையத்துக்கு வந்து மீண்டும் துப்பாக்கிகளை பெற்றுக்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X