Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Editorial / 2025 ஏப்ரல் 02 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிராம சேவகர்களை (GS) பொருத்தவரையில், அவர்களின் சேவைகளை குறைத்து மதிப்பிட முடியாது. விடுமுறை நாட்களிலும் கட்டாயம் கடமையாற்ற வேண்டிய நிலையில் அவர்கள் இருக்கின்றனர். எனினும், ஒரு சிலர் கையூடல் செய்துவிடுகின்றனர். ஏன்? இலஞ்சமும் வாங்கி விடுகின்றனர்.
அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவித் தொகைக்கான விண்ணப்பத்தை உரிய அலுவலகத்துக்கு அனுப்பாது விட்ட சம்பவமொன்று தலவாக்கலை பகுதியில் இடம்பெற்றிருந்தது. எனினும், கொடுப்பனவை வழங்காது, இழுத்தடிப்பு செய்த சம்பவமொன்று லிந்துலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
லிந்துலை பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதிக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட நபருக்கு அரசாங்கத்தினால் மாதாந்தம் 7,500 ரூபாய“ வீதம் கிராம உத்தியோகத்தர் ஊடாக வழங்கப்பட்டு வந்துள்ளது.
இருப்பினும் 2024 ம் ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை.அது தொடர்பாக கிராம உத்தியோகத்தரை பலதடவை தொடர்பு கொண்ட போதிலும் அவர் பொருத்தமற்ற முறையில் பதிலளிப்பதாகவும் பாதிக்கப்பட்ட யுவதி மற்றும் அவரின் தந்தை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் மார்ச் 26 ஆம் திகதியன்று முறைப்பாடு செய்துள்ளனர்.
சிறுநீரக பாதிப்பை பொருட்படுத்தாது தனது மருத்துவ சிகிச்சைக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் குறித்த யுவதி கொழும்பில் தொழில் செய்து வருகின்றார்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கையளிக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர் இடமாற்றம் பெற்று சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இருந்த போதிலும் தனது பிள்ளைக்கு சேர வேண்டிய தொகையை பெற்றுத் தர வேண்டும் என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இது போல் அரசினால் வழங்கப்படும் உதவிகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு கிடைக்க விடாது தடுக்கும், அரச அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். .
கடந்த சில மாதங்களுக்கு முன் பேராதனை வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்கு முகம் கொடுத்த பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு பொருளாதார ரீதியில் உதவும் வகையில் ஜனாதிபதி நிதியத்திடம் இருந்து உதவிக்காக நாடியுள்ளார்.
ஆனால் தலவாக்கலை. பிரதேச செயலகத்தில் பணியாற்றும் விடயத்துடன் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தரின் அலட்சியத்தினால் சம்பந்தப்பட்ட மாணவியின் விண்ணப்பம் ஜனாதிபதி செயலகத்திற்கு உரிய காலத்திற்குள் அனுப்பப்படவில்லை. அது தொடர்பில், இன்று வரையும் எவ்விதமான பதிலும் இல்லை.
சுஜிதா, கௌசல்யா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
56 minute ago
1 hours ago