2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

சிவனொளிபாத யாத்திரிகளை ஏற்றிச் சென்ற வேன் விபத்து

R.Tharaniya   / 2025 பெப்ரவரி 26 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவனொளிபாத யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று ​செவ்வாய்கிழமை( 26 ) அன்று விபத்துக்குள்ளானதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.

உலபனேமவெலவிலிருந்து சிவனொலிபாத யாத்திரைக்காக வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழு ஒன்று, உலபனேயிலிருந்து நாவலப்பிட்டிக்கு திரும்பிச் செல்லும்போது, ​​கினிகத்தேன-நாவலப்பிட்டி பிரதான வீதியின் கினிகத்தேன பகதுலுவ பகுதியில், வேன் வீதியோரத்தில் உள்ள மலையில் மோதியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

வேனில் பயணித்த யாத்திரிகர்கள் காயமடைந்த நிலையில் கினிகத்தேன மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X