Janu / 2024 மார்ச் 24 , பி.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்றுவந்த 15 வயதும் 3 மாதங்களேயான சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், அந்த வைத்தியசாலையில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொனராகலை பெரியாஸ்பத்திரியில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்ற சிறுவனே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த கான்ஸ்டபிள் வைத்தியசாலையில் இணைந்ததாக பணியாற்றுகின்றார். அத்துடன் அவருடைய சேவை உடன் அமுலுக்கு வரும் வகையில், இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தங்கியிருந்து சிகிச்சைப்பெற்றுவரும் சிறுவன், பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில், வாட்டுக்குப்பொறுப்பான வைத்தியர், வைத்தியசாலை நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுவந்த நிலையிலேயே, கடந்த 21ஆம் திகதியன்று அந்த கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரான கான்ஸ்டபிள், மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில், வௌ்ளிக்கிழமை (22) ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் விடுதலைச் செய்யுமாறு உத்தரவிட்ட நீதவான், 2024 ஜூன் 28ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
15 minute ago
4 hours ago
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
4 hours ago
14 Dec 2025
14 Dec 2025