Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Janu / 2024 பெப்ரவரி 20 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்கரப்பத்தனை- பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிலாஸ்கோ தோட்டத்தில் இயங்கிய பிரஜா சக்தி நிலையத்தில் கடமையாற்றிய நபர் ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து நுவரெலியா மேல் நீதிமன்ற நீதவான் விராஜ் வீரசூரிய செவ்வாய்க்கிழமை (20) தீர்ப்பு வழங்கியுள்ளார்.
நடராஜ் விஜயகுமார் என்ற 36 வயதுடைய நபருக்கே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 06.07.2017 ஆம் ஆண்டு அக்கரப்பத்தனை- கிலாஸ்கோ தோட்டத்தில் இயங்கிய பிரஜா சக்தி நிலையத்தில் கடமையாற்றிய குறித்த நபர், அக்காலப்பகுதியில் பிரஜா சக்தி நிலையத்தில் கல்வி கற்க வந்திருந்த 18 வயதுக்கும் குறைவான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இவருக்கு எதிராக நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டிருந்து.
இவர் மீதான வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாகக் கடந்த ஆறு வருடங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட இவருக்கு 10 வருடக் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி (20.02.2024) இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் ஐந்து இலட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் இல்லாவிட்டால் மேலும் மூன்று வருட சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்ற தண்டனை பணமாக ரூபாய் 25 ஆயிரம் செலுத்த வேண்டும் எனவும் இல்லாவிட்டால் மேலும் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதவான் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆ.ரமேஸ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago