2025 ஏப்ரல் 11, வெள்ளிக்கிழமை

சிறுத்தை தாக்கியதில் தொழிலாளி காயம்

Editorial   / 2024 டிசெம்பர் 05 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளி ஒருவரை சிறுத்தை தாக்கியதில் அப்பெண் படுகாயமடைந்த நிலையில் பொகவந்தலாவை வைத்தியசாலையில் (05) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  மோரா தோட்டத்தில் உள்ள தோட்ட தொழிலாளர்கள் குழுவொன்று போபத்தலாவ காப்புக்காட்டுக்கு அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த போது நாயை வேட்டையாட வந்த சிறுத்தை நாய் மீது தாக்குதல் நடத்தியது 53 வயதுடைய பெண் தொழிலாளி மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த பெண்ணின் உடல் முழுவதும் சிறுத்தையின் நகங்கள் காணப்படுவதால், அவர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா-கிளங்கன்ப வைத்தியசாலைக்கு மாற்றப்படுவார் என பொகவந்தலாவ வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X