2025 ஏப்ரல் 02, புதன்கிழமை

சிங்கமலையில் தீ: ஹட்டனுக்கு சிக்கல்

R.Tharaniya   / 2025 மார்ச் 10 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் சிங்க மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயால் பல ஏக்கர் காடு நாசமாகியுளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஹெட்லி தோட்டத்தின் வனப்பகுதி ஞாயிற்றுக்கிழமை(9) இரவு ஏற்பட்ட தீ  சிங்கமலை வனப்பகுதியில்  பரவியது.சிங்கமலை வனப்பகுதியானது ஹட்டன் நகரிற்கு நீர் வழங்கும்  பிரதான வனப்பகுதியாகும்  தொடர்ந்து  இவ்வாறான தீ பரவலில்    குடி நீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும் என நகர மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இந்த வனப்பகுதியில் இருந்து  ஹெட்லி மற்றும் சலங்கத்தை பகுதியில் அமைந்துள்ள பல பெருந்தோட்டங்கள் மற்றும் டிக்கோயா, ஹட்டன் பகுதியில் அமைந்துள்ள ஆயிரகணக்கான குடும்பங்களுக்கு குடி நீர் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மிக அடர்ந்த காடு வறண்ட காலநிலை காரணமாக மிக வேகமாக தீ பரவியதால் பல ஏக்கர் காடு எரிந்து நாசமாகியதாக ஹட்டன்  வன பாதுகாப்பு   அதிகாரிகள் தெரிவித்தனர்.

இனம் தெரியாத விசமிகளால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் காடுகளுக்கு தீ வைப்போர் தொடர்பில் அறியத் தருமாறு பொது மக்களிடம் பொலிஸார்  வேண்டுகோள்  விடுத்துள்ளார்.

மு. ராமச்சந்திரன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X