Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Janu / 2024 மே 05 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டியில் ஆடை விற்பனை நிலையமொன்றில் இருந்து பெண்ணொருவரின் பணப்பையைத் திருடியதாகக் கூறப்படும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கண்டி தலைமையக பொலிஸாரின் குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பணப்பையின் உரிமையாளர் ஏப்ரல் 9 ஆம் திகதி ஆடை விற்பனை நிலையமொன்றுக்குச் சென்று, பையை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரு ஆடையைச் சரிபார்த்து, மீண்டும் பையை எடுத்துப் பார்த்தபோது, அதில் பணப்பை இல்லாதமையால் கண்டி தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
அதன் பிரகாரம் குற்றப் பிரிவினரால் மேற்கொண்ட விசாரணையின் பின்னர், குறித்த ஆடை விற்பனை நிலையத்தின் கண்காணிப்பு கேமராவை சோதனையிட்ட போது, பெண் ஒருவர் கைப்பையைத் திறந்து பணப்பையை திருடிச் சென்றதைக் காணொளியாகப் பதிவாகியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய சந்தேகநபரை கைது செய்து தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த பெண் பொக்காவல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago