Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Editorial / 2024 செப்டெம்பர் 03 , பி.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொழிலாளர்களின் நாட் சம்பளம் குறித்து செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளும் எந்த இணக்கப்பாடும் இன்றி முடிவுற்றது. எதிர்வரும் 10 ஆம் திகதி மீண்டும் பேச்சு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1350 மாத்திரமே தம்மால் வழங்க முடியும் என்றும் அதற்கு தொழிற்சங்கங்கள் உடன்பட்டதாலேயே மீண்டும் பேச்சு வார்த்தை மேசையில் அமர்ந்தோம் என்றும் கம்பனிகள் கூறியுள்ளன.
இந்நிலையில்,இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்திய சட்டத்தரணி மாரிமுத்து இன்னுமொரு நாள் பேச்சு வார்த்தை நடத்தலாம் என கோரியுள்ளார் என அறியமுடிகின்றது.
அதற்கு கம்பனிகளோ, இன்னும் எத்தனை நாட்கள் பேச்சு நடந்தாலும் நாம் கூறிய தொகையைத் தவிர ஒரு சதமேனும் அதிகரிக்க முடியாது. அவ்வாறு 1700 ரூபாய் கொடுக்க வேண்டுமென்றால் அடுத்த மூன்று வருடங்களுக்கு சம்பள அதிகரிப்பு இல்லை என கூறிவிட்டன.
சம்பள நிர்ணய சபையால் அவ்வாறான தீர்மானங்களுக்கு வர முடியாது என தொழில் ஆணையாளரும் கூறி விட்டார். 1,350 ரூபாய்க்காவது இப்போது இணங்கியிருக்கலாம் என்றும் மிகுதி 350 ரூபாய் குறித்து பிறகு பேசலாம் என கலந்து கொண்ட ஏனைய தொழிற்சங்கங்கள் கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago