2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

சம்பள பிரச்சினை இன்று பேச்சு

Mayu   / 2024 ஜனவரி 09 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் உயர்வு தொடர்பான இணக்கப்பாட்டை எட்டும் பேச்சுவார்த்தை கொழும்பில் இன்றைய தினம்  (09) மாலை 03 மணிக்கு இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும்,இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்க பொது செயலாளருமான ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:    தோட்டத் தொழிலாளர்களுக்கு  சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி,மற்றும் தொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்து

கடந்த காலங்களில் பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளோம்.

அந்த வகையில் தோட்ட தொழிலாளர் ஒருவரின் ஆக குறைந்த நாள் சம்பளம் 1,700/=ரூபாய் என பெருந்தோட்ட கம்பனிகளுக்கு, தொழில் அமைச்சுக்கும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த 1,700/= ரூபாவை ஆரம்பமாக முன்வைத்து இதற்கு மேலதிகமாக சம்பள உயர்வை பெற்றுக் கொள்ளும் இலக்குடன் இந்த பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது.

கொழும்பில் தொழில் அமைச்சில் மாலை 03 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த பேச்சுவார்த்தையில் பங்குபற்றும் தொழிற்சங்கங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்றைய பேச்சுவார்த்தையில் தொழில் அமைச்சர்,தொழிற்சங்க பிரதானிகள், தொழில் திணைக்கள ஆணையாளர்கள் பெருந்தோட்ட கம்பனிகளின் பிரதநிதிகளுடன் பேசவுள்ளதாகவும் அவர்  மேலும் தெரிவித்தார்.

ஆ.ரமேஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .