2025 மார்ச் 04, செவ்வாய்க்கிழமை

சுமார் 12 வீடுகள் எரிந்து நாசம்

Freelancer   / 2025 மார்ச் 03 , பி.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் - ஷெனன் தோட்டத்திற்கு சொந்தமான கே.எம். பிரிவில் உள்ள தொடர் குடியிருப்பு ஒன்றில் இரவு (03) தீப்பரபல் ஏற்பட்டுள்ளது. 

இந்த தீ விபத்தில் சுமார் 12 வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

எனினும், இந்த தீ விபத்தில் எவருக்கும் பாதிப்புக்கள் ஏதும் ஏற்படாத நிலையில், மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. 

இந்த தீ விபத்தினால் தோட்ட தொழிலாளர்களின் பொருட்கள் மற்றும் உடமைகள் தீக்கிரையாகியுள்ளன. 

தீயை கட்டுப்படுத்த தோட்ட தொழிலாளர்களும், பகுதி மக்களும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .