Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை
Editorial / 2025 ஏப்ரல் 09 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்ன , பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரை, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில், செவ்வாய்க்கிழமை (08) சந்தித்தார்.
மலையக மக்களுக்கு வழங்கப்பட்ட இந்திய வீடமைப்புத் திட்டத்தையும், மலையக பாடசாலைகளுக்கான ஸ்மார்ட் வகுப்பறைகள் வழங்கும் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்தின் வினைத்திறன் குறித்து மகிழ்ச்சி அடைவதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இதன்போது தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் மக்கள் அரசாங்கமாக பிரபல்யம் அடைந்துள்ளதாகவும் அதனால் தான் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாக தாம் நம்புவதாகவும் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மலையக சமூகத்தினருக்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 10,000 வீடுகளின் முன்னேற்றம் மற்றும் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைகளின் செயற்பாடுகள் தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்திருந்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான அண்மைய விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுவடைந்துள்ளதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்திருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago