2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

கொரிய யுவதியிடம் சேஷ்டை புரிந்தவர் கைது

Janu   / 2024 ஜூலை 02 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரியா நாட்டிலிருந்து இலங்கைக்குச் சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டு நுவரெலியாவுக்கு சென்ற இளம் யுவதியிடம் தகாத வகையில் சேஷ்டை செய்த இயந்திர படகு ஓட்டுநர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் திங்கட்கிழமை (01) உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த யுவதி கிறேகறி தெப்பக்குள பகுதிக்கு (30) மாலை அழகை ரசிக்க சென்று அங்குக் குளத்தில் இயந்திர படகில் சவாரி செய்ய முற்பட்டுள்ளார்.

இந்த சமயத்தில் குளத்தில் படகு சேவையில் ஈட்டுப்பட்டிருந்த இளைஞர் குறித்த யுவதியிடம் சேஷ்டையில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து, யுவதி நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்குச் சென்று தனக்கு நேர்ந்தது தொடர்பில் முறையிட்டதையடுத்து, சுற்றுலாத்துறையை பொறுப்பான பொலிஸ் பிரிவினர் கிறேகறி குளத்திற்குச் சென்று சேட்டையில் ஈடுபட்ட இளைஞரைக் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞரை விசாரணைக்காக நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது,  விசாரித்த நீதவான் பிரபுதிகா நாணயக்கார, சந்தேக நபரை எதிர்வரும் திங்கட்கிழமை (15) விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆ.ரமேஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X