2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கைக்குண்டு மீட்பு

Janu   / 2024 ஜனவரி 18 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீடு ஒன்றுக்கு அருகில்  இருக்கும் கட்டத்தில் கற்பாறைக்குள்  இருந்து கைக்குண்டு ஒன்றை புதன்கிழமை (17)  மதியம் மீட்டுள்ளனர்.

அம்பகஸ்தென்ன பகுதியில் உள்ள வீடு ஒன்றை சுற்றி கட்டிடம் கட்டும்போது அருகிலிருந்த கற்பாறைக்குள் இருந்தே குறித்த . கைக்குண்டு மீட்டுள்ளனர்.

இது தொடர்பில் வீட்டு உரிமையாளர் வெலம்பொட பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து புதன்கிழமை (17)   இரவு முதல் அந்த இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், வியாழக்கிழமை (18)   கண்டி விசேட அதிரடிப் படையின் குண்டு செயலிழக்கும் குழுவினர் வருகை தந்து குறித்த  கைக்குண்டை வெடிக்க வைத்துள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணை வெலம்பொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 நவி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .