2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

கொஸ்லாந்தையில் 244 குடும்பங்கள் வெளியேற்றம்

Editorial   / 2023 ஒக்டோபர் 15 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஸ்லாந்த மீரியபெத்த பழைய மண்சரிவு பகுதி மற்றும் அதனை அண்மித்த பிரதேசத்தின் இருபுறங்களிலும் உள்ள 244 குடும்பங்கள் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரையின் பிரகாரம் உடனடியாக அவர்களின் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதாக ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் கே.  ஜே. திருமதி பிரியங்கிகா தெரிவித்தார்.

 

கொஸ்லாந்த மீரியபெத்தவை சேர்ந்த நூற்று நாற்பத்து நான்கு குடும்பங்கள் கொஸ்லந்த தேயிலை தொழிற்சாலைக்கும், மஹகந்தவில் இருபத்தி மூன்று குடும்பங்கள் மல்வண்ண தேயிலை தொழிற்சாலைக்கும், திபுல்கசமுல்லவை கொஸ்லந்த சிங்கள வித்தியாலயத்துக்கும், கொஸ்லந்த தமிழ் வித்தியாலயத்துக  81 குடும்பங்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக பிராந்திய செயலாளர் தெரிவித்தார்.

இரவு வேளைகளில் யானைகள் சுற்றித் திரிவதால், மஹகந்த வத்தை பகுதியில் உள்ள குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதில் சிறு தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அனர்த்த நிவாரண அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த முகாம்களில் தற்போது 768 பேர் இருப்பதாக ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் கே.ஏ.ஜே.பிரியங்கிகா மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .