2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

கெரண்டியில் குதித்த இளம் ஜோடி மீட்பு

Janu   / 2024 ஜூன் 05 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொத்மலை கெரண்டி நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே குதித்து தங்களுடைய உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற இளம் ஜோடி, அப்பகுதி மக்களால் காப்பாற்றப்பட்ட சம்பவமொன்று புதன்கிழமை (05) இடம்பெற்றுள்ளதாக கொத்மலை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .

புஸ்ஸல்லாவ , ப்ரோடெக் தோட்டத்தை சேர்ந்த 18 வயதுடைய இளம் காதல் ஜோடியே இவ்வாறு தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

குறித்த நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே குதித்த இளம் ஜோடி, பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டுள்ளதுடன்,  இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இருவரும் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்ட இளம் ஜோடியை புஸ்ஸல்லாவ பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்ததன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கம்பளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் , இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக  கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .