2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

கெப் வண்டி புரண்டதில் எட்டுபேர் காயம்

Editorial   / 2025 ஏப்ரல் 20 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

ராகலையில் இருந்து அம்பாறையின் சியம்பலாண்டுவ நோக்கிச் சென்ற பொலேரோ ரக கெப் வண்டி புரண்டதில், எட்டு பேர்  காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக வலப்பனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்தன்.

ராகலை, உடுவமதுரவில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்த   ஒரு குழுவினர் சியம்பலாண்டுவவுக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது, ​​வலப்பனை, நில்தண்டஹின்ன அம்பன்வெல்ல பகுதியில் அவர்கள் பயணித்த கெப் வண்டி சாலையில் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (20) ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டிச் சென்ற கேப் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டார், கேப் வண்டியை நிறுத்த முயன்றபோது, ​​கேப் பிரதான சாலைக்கு அருகிலுள்ள மலையில் மோதியது. அந்த நேரத்தில், வண்டி மலையில் மோதி பிரதான வீதியின் குறுக்கே கவிழ்ந்ததுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .